உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சுருளி சுரங்கப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சுருளி சுரங்கப்பாதைகள் எரட்டையாற்றில் இருந்து இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை எடுத்துச் செல்கின்றன

அஞ்சுருளி சுரங்கப் பாதை (Anchuruli tunnel) இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருக்கும் இடுக்கி மாவட்டத்திலுள்ள அஞ்சுருளி பஞ்சாயத்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சுரங்கப்பாதையாகும். 5.5 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரே கருங்கல்லில் இப்பாதை செதுக்கப்பட்டுள்ளது. இரட்டையாறு முதல் அஞ்சுருளி இடுக்கி நீர்த்தேக்கம் வரை தண்ணீரை கொண்டு செல்ல கல்யாநாதண்டு மலை மீது அஞ்சுருளி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3] இந்த சுரங்கப்பாதை 1974 ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் 1980 சனவரி 10 வரை பைலி பில்லா நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கட்டப்பட்டது. சுரங்கப்பாதை 24 அடி விட்டம் கொண்டது. சுரங்கப்பாதை அமைக்கும் போது இருபத்தி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. m.g, Gokul (4 July 2018). "A journey off the map". The Asian Age.
  2. admin (25 October 2017). "Stepping Into A Vacuum, Story Of Dangerous Anchuruli, Chat With A Local". Archived from the original on 26 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Anchuruli tunnel, popularised by 'Iyobinte Pusthakam'". OnManorama.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சுருளி_சுரங்கப்_பாதை&oldid=3927010" இலிருந்து மீள்விக்கப்பட்டது